தளபதி-65ல் இணைந்த பிரபலம்.! வேலைகள் ஆரம்பிச்சாச்சு போலயே.!

Default Image

தளபதி – 65ன் கதைப்பணியில் இயக்குநர் முருகதாஸூடன் மூத்த திரைக்கதை எழுத்தாளரான ஆர். செல்வராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும்,எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் தகவல்கள் வெளியாகியிருந்தது.

சமீபத்தில் தளபதி 65 ன் கதையை பல கதையாசிரியர்களுடன் இணைந்து திரைக்கதை எழுதும் பணியில் முருகதாஸ் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது இந்த குழுவினருடன் மூத்த எழுத்தாளரான ஆர். செல்வராஜ் அவர்கள் கதைப்பணியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . மணிரத்னம் அவர்களின் அலைப்பாயுதே உட்பட பல படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ஆர். செல்வராஜ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்