இதுனால்தான் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கவில்லை – பதிலளித்த இம்ரான் கான்.!
எல்லை பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது – இம்ரான் கான்
உலக முழுவதும் கொரோனா சூழலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நடத்த வேண்டும் என்றும் அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை இருநாட்டு கொரோனா மீட்புப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், தற்போதுள்ள அரசாங்கத்துடன் இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடினால் மைதானத்தில் பயங்கரமான சூழல் நிலவும் என்று நினைக்கிறன் என்றார். இதனால் இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியுடன் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. ஆனால் எல்லை பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.