காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லும்!
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடாவிடம் ,கர்நாடகாவில் வீரசைவ – லிங்காயத் தனி மத விவகாரத்தில் காங்கிரஸ் , தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.இதனை கடுமையாக விமர்சித்துள்ள அவர், இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என எங்களுக்கு தெரியாது. ஆனால் லிங்காயத்களின் கோரிக்கையை முந்தைய காங்கிரஸ், அரசு கடுமையாக எதிர்த்தது.
தற்போது இருக்கம் காங்கிரஸ், அரசு அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. காங்., தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் என்றார்.மேலும், பகுஜன் சமாஜ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வரும் கர்நாடக சட்டசபையில் நல்ல பலனை அளிக்கும் என்றார். ஆந்திரா கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது பற்றி அது விவாதத்திற்கு எடுத்துக் கொளள்ளும் போது முடிவு செய்யப்படும். பார்லிமென்டில், பலமுள்ள பெரிய கட்சிகளே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.