அரியாங்குப்பத்தில் 13 சவரன் நகைகள் திருட்டு..!
அரியாங்குப்பத்தில் 13 சவரன் நகைகள் திருட்டு.
அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் இவர் அங்கு ஓட்டல் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுபாஷினி சுபாஷினி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சுபாஷிணி தனது வீட்டை பூட்டி தனது மருமகள் விஜயலட்சுமி உடன் சொந்த வேலைக்காக முதலியார்பேட்டை க்கு சென்றுள்ளார்.
மேலும் அப்பொழுது வேலை முடிந்து சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் இதனை பார்த்த சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார், மேலும் சுபாஷினி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த கம்மல் மோதிரம் செயின் போன்ற 13 சவரன் நகைகள் திருடு போனது அவருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேலும் அதன் பிறகு சுபாஷினி காவல்துறைக்கு தகவல் அளித்தார் மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை அனைவரையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.