50 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த தனுஷின் ‘ChillBro’ பாடல்.!
தனுஷ் நடித்து பாடிய ‘பட்டாஸ் படத்திலுள்ள chill bro பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பட்டாஸ்’. ஆர். எஸ். துரைசாமி இயக்கத்தில் தனுஷூடன் சினேகா, மெஹ்ரின், நவீன் சந்திரா, KPY சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை என்ற சண்டை முறையை கதைகளமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் பாடிய ‘Chill Bro’ என்ற பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.