டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Default Image

டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த சில்லறை விற்பனை கடைகள் வருகின்ற 18-ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. மால்கள், மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி; அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்!யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்.கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.facebook.com/MKStalin/posts/1699997523493444

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்