கமலா ஹரிசுக்கு பேனர் வைத்த கிராம மக்கள்!

கமலா ஹரிசுக்கு பேனர் வைத்த கிராம மக்கள்.

ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இவரை தமிழகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மன்னார்குடி மாவட்டம், பைங்காடு, துளேசிந்தபுரம் கிராமத்தை   சொந்த ஊராக கொண்டவர் தான் கமலா ஹரிஸ். இதனையடுத்து, இந்த கிராம மக்கள், கமலா ஹரிஸ் வெற்றி பெற வேண்டும் என பாராட்டி பேனர் வைத்துள்ளனர். இவரது தாத்தா கோபாலன் இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான்.

இந்த பேனரின் புகைப்படத்தை  கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா  தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,  ‘நான் சிறு வயதில் சென்னைக்கு சென்றபோது எனது பெரிய தாத்தாவுடன் பழகி இருக்கிறேன் என் பெரிய தாத்தாவும் பாட்டியும் இப்போது எங்காவது எழுந்து எங்களை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸின் சகோதரி மாயலக்ஷ்மி, பெண்கள் நலனுக்காக போராடக் கூடிய ஒருவர் ஆவார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.