எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான்…!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், அது எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான் என்றும், தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படபோகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு பரிந்துரைத்த ஐந்து இடங்கள் குறித்து மத்திய அரசு கோரியபடி, ஆட்சியர்கள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அமைச்சர்கள் சிலர் தங்கள் மாவட்டத்திலேயே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது எதிர்க்கட்சித்துணைத்தலைவருக்கு பிடிக்கவில்லை என்றும், தாங்கள் நினைப்பது நடக்காது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே நோக்கம் என்றும், அது எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சியே எனவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.