கொரோனாவிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரிப்பு!
கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 1.45 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதுமே திக்குமுக்காடி கிடக்கும் நிலையில், இதுவரை கோரியோனா வைரஸால் தொற்றால் 21,825,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 773,065 பேர் உயிரிழந்துள்ளனர், 14,559,631 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 2.18 கோடி பேரில், மூன்றில் இரு பகுதியினர் குணமாகியுள்ளனர் என்பதே மகிழ்ச்சியான செய்தி.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 212,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,533 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,491,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.