தமிழகத்தில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசம்!
தமிழகத்தில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்க உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், விரும்பு அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்து கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.