ஆபத்து நிறைந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் – டிடிவி தினகரன்
ஆபத்து நிறைந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக சென்னையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் இன்று அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து, டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.