அப்பா உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது – மகன் S.P.சரண்

Default Image

சில தினங்களுக்கு முன் இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளதாக மகன் சரண் தெரிவிப்பு.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்த நிலையில் இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், எனது தந்தை எஸ்.பி.பி. மெல்ல மெல்ல தேறி வருகிறதாகவும், முன்பு விட தற்போது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்தார்.

இதற்கிடையில் இன்று மகன் சரண் பேசிய ஒரு வீடியோ ஒன்று வெளியகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளது, கண் விழித்து மருத்துவரிடம் கை சைகை செய்தார் என கூறினார். மேலும் அவர் கூறுகையில், அம்மாவும் குணமாகி வருகிறார்கள் ஓரிரு நாட்களில் நலம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்