சென்னை கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை:…!
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை பெருநகரம் 500 வீடுகள் வீதம் சிறுவட்டங்களாக பிரித்து, கொசு உற்பத்தியை தடுக்கும் பணியில், 3 ஆயிரத்து 233 பேர் பணியாற்றிக் கொண்டிருப்பதாக, தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், கொசு மருந்து அடித்தாலும் அகன்றுபோகாத அளவிற்கு, கொசுக்களின் வீரியம் அதிகரித்திருப்பதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொசுவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால், யானைக்கால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும்,நீர்வழிப் பாதைகளில் உள்ள மிதக்கும் பொருட்களை அகற்றுவதற்கு ரோபோட்டிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.