முக்கிய அறிவிப்பு !தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்…!

Default Image

தயாரிப்பாளர் சங்கம் கடந்த  மார்ச் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்தது.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்கக் கோரியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடவில்லை.

மேலும், 8% கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த  16-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

கடந்த  16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார். இது தொடர்பாக அவர் , க்யூப் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு ஏற்படாததால் கடந்த  16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகள் குறித்து அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்  விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை என  அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்