கொரோனாவிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் – ராதாகிருஷ்ணன் தகவல்
கொரோனாவிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் உருவாக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,32,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1179 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,15,444 ஆக அதிகரித்துள்ளது.மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5641 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 5236 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர் .
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவர்களை கண்காணிக்க தனியாக மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார். கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர்களுக்கு , உடல்நலக்குறைவுக்கு உள்ளானது தெரிய வந்தது .எனவே அவர்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதியதாக ஒரு மையம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.