‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம் – மு.க ஸ்டாலின் இரங்கல்.!
திமுக தலைவர் முக ஸ்டாலின் 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை எருக்கஞ்சேரி மற்றும் வியாசர்பாடியில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன், 1973 ல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பை முடித்தார். முதலில் 2 ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கிய அவர், பின்னர் 5 ரூபாயாக உயர்த்தி மருத்துவ சேவையை செய்து வந்தார். இவரது சேவைக்கு மருத்துவர்கள் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 5 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார்.
70 வயதான இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் இழப்பு அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளது. பல தலைவர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம். எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்!
எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/CWHq8tCtUu
— M.K.Stalin (@mkstalin) August 16, 2020