பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை ! பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது – கனிமொழி
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை செய்யப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆணின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது.இதனிடையே பிரதமர் மோடி நேற்று சுதந்திர தின விழா உரையில் பேசுகையில்,மத்திய அரசு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைத்துள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
The Prime Minister’s announcement that the minimum age of marriage for women will be reconsidered and raised from 18 to 21 is a welcome step in the right direction to empower women.
2/3
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 16, 2020