பாடகர் பாலசுப்ரமணியத்திற்கு பிளாஸ்மா சிகிச்சை…!

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார்.
இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர்.
உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், எஸ்.பி.பி உடல் நலம் குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது, உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025