நன்றாக பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவ்வளவாக பேச மாட்டார் என்றும், தற்போது நன்றாக பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கம் அமைதி வளம் வளர்ச்சி தான் என்று குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால், முதலில் உள்ள அமைதி உள்ளதா என்பது கேள்விகுறியாக இருப்பதாக கூறினார். ரவுடிகள் கேக் வெட்டி கொண்டாடும் அளவுக்கு அது உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வளம் அதிகரித்த காரணத்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே, வளம் பற்றி ஏராளமாக பேச முடியும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பேசிய துரைமுருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது இவ்வளவு பேச மாட்டார் என்றும், முதலமைச்சர் ஆனதும் நன்றாக பேசுவதாகவும், இந்த வளர்ச்சி தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.