ரன் அவுட்டில் தொடங்கி, ரன் ஆவுட்டிலே நிறைவடைந்த “தல” தோனியின் கிரிக்கெட் பயணம்.. கண்ணீரில் மிதக்கும் ரசிகர்கள்!
எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி என ரசிகர்கள் பலரின் மனதில் காயங்களை வளர்த்து ஓய்வு பெற்றார், தல தோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இதுவரை 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி-20 போட்டிகளில் விளையாண்டு பல சாதனைகள் படைத்தார். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு கோபப்பட்டால், தனது கோபத்தை வீரர்களிடம் காட்டமாட்டார் என்பதே.
அவரின் கிரிக்கெட் வரலாறு, 2004 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. அம்மாதம் 23 -ம் தேதியன்று வங்கதேசதிற்கு எதிராக போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியை கங்குலி தலைமை வகித்தார். அந்த போட்டியில் தோனி ரன் அவுட் ஆனார். அதுவே அவரின் முதல் போட்டியாகும்.
அதன்பின், 2007 -ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த போட்டியில் சீனியர் வீரர்கள் யாருமே இல்லை. தோனி தலைமையில் உள்ள இளம் வீரர்களை பிசிசிஐ அனுப்பியது. அனால் அந்த ஆண்டு, உலகக்கோப்பையுடன் தோனி இந்தியா திரும்பினார். இது அவர் செய்த மிகப்பெரிய சாதனையாகும்.
அதன்பின் 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் தோனி-கம்பிர் இணைந்து அடித்த ரன்களால் அந்தாண்டு உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில், ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தார்.
அந்த தொடரில், இந்தியா-நியூஸிலாந்து இடையே நடந்த அந்த போட்டியில் தோனி ரன் -அவுட் ஆனார். அந்த நிகழ்வு, ரசிகர்கள் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மேலும், அந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி கோப்பையுடன், தல தோனியை தோளில் வைத்து, மைதானத்தை சுற்றி வருவார்கள் என நினைத்த பல கோடி மக்களின் கனவு, கனவாகவே கலைந்தது. அதுவே அவர் விளையாண்ட கடைசி போட்டியாகும்.
சர்வதேச போட்டிகளை தவிர்த்து, உலகளவில் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆண்டுதவறாது நடைபெறும் ஐபிஎல் தொடரிழும் பல சாதனைகளை படைத்தார். இவர் தலைமை தாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும், ஜார்கண்ட் மாநிலம், ரஞ்சியின் பிறந்தாலும், தமிழ்நாடால் கொண்டாடப்படும் “தல” ஆவார். அதற்க்கு காரணம், தமிழக மக்கள் அவருக்கு அளித்த ஆதரவே ஆகும்.
மேலும், தோனியை மக்கள் செல்லமாக “தல” என்று அழைத்து வருகின்றனர். மேலும், நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்காக தல தோனி காத்திருந்த நிலையில், தற்பொழுது அவர் பயிற்சிக்காக நேற்று சென்னை வந்தார். அவர் வரும் செய்திகளை அறிந்த ரசிகர்கள், “வெய்ட்டிங் பார் தல என்ட்ரி” என ட்விட்டரில் தெறிக்க விட்டனர்.
ஆனால், அவர் அங்குவைத்து ஒரு மனமுடையும் செய்தியினை அறிவிப்பார் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், இன்று தனது இன்ஸ்டா பதிவில் “எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். திடீரென தனது ஓய்வினை அறிவித்த தோனியின் செயலை அறிந்த ரசிகர்கள், மனமுடைந்தனர்.
மேலும், தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணம், ரன் அவுட்டில் தொடங்கி, அதே ரன் அவுட்டிலே நிறைவடைந்தது. அதுமட்டுமின்றி, தனது சொந்த மண்ணான ராஞ்சியில் தொடங்கிய அவரின் கிரிக்கெட் பயணம், தற்பொழுது அவரின் மற்றொரு சொந்த மண்ணான சென்னையில் நிறைவடைந்தது.
View this post on Instagram
Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடர், அதன்பின் நடைபெறவுள்ள அனைத்து சர்வதேச போட்டிகளில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்- ஐ மிஸ் செய்வது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனியை பற்றி கூகுளில் தேடினால், அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். ஆனால், தற்பொழுது அவரை பற்றி எங்கு தேடினாலும், அவர் ஓய்வுப்பெற்ற செய்திகள் குவிந்து வருகின்றது. இது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.