‘covid go away’ – அமெரிக்க விவசாயியின் அட்டகாசமான செயல்!

Default Image

அமெரிக்க விவசாயியின் அட்டகாசமான செயல்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதையுமே  இந்த கொரானா வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 13 ஏக்கர் நிலத்தில் பொதுமக்களை உற்சாகமூட்டும் வகையில் சோள சாகுபடியில் ‘covid go away’ என பிரம்மாண்டமான எழுத்துக்களை உருவாக்கி உள்ளார். அவர் தோட்டத்தில் ஏரியல் வியூவில் பார்த்தால் இந்த எழுத்துக்கள் தெரியும். அதற்கு ஏற்ப தன்னுடைய சாகுபடி எழுத்துக்களாக வெட்டி எடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 13 ஏக்கரும் இணைவது போல பல கோடுகள் போலவும் சாகுபடி வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜான்சன் என்ற அந்த விவசாயி கூறுகையில் மக்கள் கொரோனாவால் சோர்வடைந்து உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் முயற்சி என தெரிவித்துள்ளார்.. மேலும்,  இந்த படத்தை பார்க்க அப்பகுதி மக்கள் வருகை தரும் போது அவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித உடையுடன் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்