சென்னை மருத்துவமனையில் இன்சுலினோமா புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை!
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்சுலினோமோ எனப்படும் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
சுயநினைவின்றி அடிக்கடி மயங்கி விழுதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளான சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஜம்ஷத் பேகம் என்ற பெண் கடந்த ஜனவரி மாதம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலிப்பு நோய் எனக் கூறப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்த அவருக்கு, கணைய பகுதியில் இன்சுலினோமா எனப்படும் புற்றுநோய்க் கட்டி உருவாகி இருப்பதை ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் அவருக்கு ஆறுமணி நேரம் சிக்கலான அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.பாதிக்கப்பட்ட ஜம்ஷத் பேகம் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.