சுதந்திர தினத்தை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் மூலம் வித்தியாசமாக வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்.. அது எப்படி? இதோ!!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இன்று தனது 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள். இதற்கு பல லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது இன்று நாம் நினைவுகூரத்தக்கது.
வழக்கமாக வருடாவருடம் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் முக்கிய பிரமுகர்களே மட்டும் பங்கேற்க அனுமதி விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் சற்று வித்தியாசமாக கொண்டாட ஒரு பிரபலமான வழி உள்ளது, அது வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் மூலம்.
வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் தற்பொழுது மக்களிடையே பிரபலமடைந்தவை. வேடிக்கை புகைப்படங்களை வைத்து அரட்டையில் பொது, பலரும் கவுண்டர் காமெடி அடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொள்ளலாம்.
அதனை எப்படி செய்வது:
ஆண்ட்ராய்டு:
- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் செயலிக்குள் நுழையவும்.
- யாருக்கு ஸ்டிக்கர் அனுப்பவேண்டுமோ, அவரின் சாட்-க்குள் செல்லவும்.
- ஈமோஜி பட்டனை கிளிக் செய்து, ஸ்டிக்கர்கள் பகுதிக்குச் செல்லவும். ‘Get more stickers’ என்பதை தேர்வுசெய்யவும்.
- வாட்ஸ்அப், உங்களை Google Play Store க்கு திருப்பிவிடும்.
- அதில், “Independence Day stickers” என்று டைப் செய்யுங்கள்.
- அந்த செயலிக்குள் சென்று, ஸ்டிக்கர்ஸை தேர்வுசெய்ததும், ‘ ‘ என்பதைக் கிளிக் செய்து, ஸ்டிக்கர் பேக் பதிவிறக்கம் செய்யப்படும்.
- நீங்கள் அதை வாட்ஸ்ஆப்-ல் சேர்க்க விரும்புகிறீர்களா என்று ஒரு பாப்-அப் விருப்பம் கேட்கும். அதற்கு ஆம் என்பதைக் கிளிக் செய்க.
சுதந்திர தின ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டதும், ஈமோஜி அடையாளத்தைக் கிளிக் செய்வதன் மூலம் அதை உங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
iOS:
- உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் ஆப் ஸ்டோரைத் திறக்கவும்.
- “Independence Day stickers” என தேடுங்கள். அதில் நீங்கள் ஏராளமான விருப்பங்களைக் காண்பீர்கள். (சில செயலிகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க)
- உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கவும்.
- சுதந்திர தின ஸ்டிக்கர் பேக்கை வாட்ஸ்அப் உடன் ஒருங்கிணைக்கவும்.
- முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் சுதந்திர தின ஸ்டிக்கர்களைக் கண்டுபிடித்து, உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி, இந்த சுதந்திர தினத்தை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்.