2 -ஆம் கட்டமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு
2 -ஆம் கட்டமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை எழுந்து வருகிறது.இதற்கு இடையில் இன்று அமைச்சர்கள் ஜெயக்குமார்,செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம்,தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பன்னீர்செல்வத்துடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது.இதன் பின் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை நிறைவு பெற்ற பின் அமைச்சர்கள் மீண்டும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை மேற்கொண்டனர். 2-ஆம் கட்டமாக துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடைபெற்று முடிந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் 2-ஆம் கட்டமாக ஆலோசனை மேற்கொண்டனர்.தற்போது அந்த ஆலோசனை நிறைவுபெற்றுள்ளது.