அதிபர் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதி!!

அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரரான ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரனான ராபர்ட் டிரம்பின் உடல்நிலையில் மோசமடைந்தது, இதன்காரணமாக, அவர் நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், அவரின் சகோதரரின் நோய் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த சந்திப்பில், எனக்கு ஒரு அருமையான சகோதரர் இருக்கிறார் எனவும், முதல் நாளிலிருந்து, நீண்ட காலத்திற்கு முன்பு எங்களுக்கு ஒரு பெரிய உறவு இருக்கிறதாக தெரிவித்தார்.
ஆனால் தற்பொழுது அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என கூறிய டிரம்ப், அவர் நன்றாக இருப்பார் என்று நம்புகிறதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப், தனது சகோதரரை நியூயார்க்கில் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025