கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் களைகட்டிய எருதுவிடும் விழா!
பர்கூரில் எருதுவிடும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் களைகட்டியது. கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள் இப்போட்டிக்கு அழைத்து வரப்பட்டன. விழா தொடங்கியதும் அவிழ்த்து விடப்பட்ட காளைகள், வழிநெடுக்கிலும், இருபுறமும் திரண்டிருந்த ஏராளமானோருக்கு மத்தியில் சீறிப்பாய்ந்தோடியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.