short video அம்சங்களை சோதித்து வரும் பேஸ்புக்.!
இந்தியாவில் பேஸ்புக் தற்போது புதிய குறுகிய வடிவ வீடியோக்களை சோதித்து வருகிறது. பேஸ்புக்கில் குறுகிய வீடியோக்கள்(short video) பிரிவு ஓன்று உள்ளது. அதன் மேல் (Create) பட்டன் உள்ளது. அந்த பட்டனை கிளிக் செய்து வீடீயோவை உருவாக்கி கொள்ளலாம். மேலும், பயனாளர்கள் ஸ்வைப் செய்வதன் மூலம் வீடியோக்களை பார்க்கலாம்.
சமூக ஊடக ஆலோசகர் மாட் நவர்ரா இந்த குறுகிய வீடியோக்கள்(short video) பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், பேஸ்புக் தனது முக்கிய பயன்பாட்டில் டிக்டாக் போன்ற ஸ்வைப் அப் மூலம் ஒரு ‘குறுகிய வீடியோக்கள்’ சோதித்து வருகிறது. இது இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு கூடுதலாக இருப்பதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் தற்போது பேஸ்புக் பயனாளர்களின் தினசரி ஈடுபாடு 25% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யூடியூப் குறுகிய வீடியோக்களை அம்சத்தையும் கொண்டுவந்தது. இந்த அம்சம் இன்னும் சோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் அதிகமான பயனர்கள் இந்த அம்சத்தை அணுகியுள்ளனர் என கூறப்படுகிறது.
இதனால், பேஸ்புக் குறுகிய வீடியோக்கள்(short video) அம்சத்தை வைத்து சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.