2018-19 ஆம் ஆண்டிற்கான 53,000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தது டெல்லி அரசு!

Default Image

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு  சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டிற்கான 53,000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை, டில்லி துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்தது.

ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தந்திரமான வரவு செலவு திட்டத்தை ஆத்ஆத்மி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளதாக துணைமுதல்வர் தெரிவித்துளளார்.

மேலும், பட்ஜெட் குறித்து பேசிய துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா, இது ஆம்ஆத்மி அரசின் முதன்முதலான பசுமையான பட்ஜெட் என்று தெரிவித்துள்ள துணைமுதல்வர், நகரத்தில் மாசுக்களை கட்டுப்படுவதில் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று கூறினார்.இந்த பட்ஜெட்டில், மாநிலத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் நீர் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகவும், மாநிலத்தின் போக்கு வரத்து, மின்சாரம், சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை போன்ற 26 துறைகளுடன் இணைந்து மாசுக்கு எதிராக ஒருகிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.மேலும் மாநிலம் முழுவதும், நகராட்சி உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்சி சாலைகள் பழுது மற்றும் பராமரிப்பிற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறினார்.டெல்லி  அரசின் கடந்த ஆண்டு ரூ.44,370 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை யில், இந்த ஆண்டு 53000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட 19.45 சதவிகிதம் அதிகம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot