தேசத்தை முன்னிறுத்தி தேச நலனுக்காய் உழைப்போம் – பா.ஜ.க தலைவர்

Default Image

தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் முருகன்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் முருகன் தனது ட்வீட்டர் பக்கத்தில்  74 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் தலைமையில் புதிய பாரதத்தை உருவாக்குவோம்

மக்களின் அடிப்படை வசதி தொழில் வளர்ச்சி ஏற்றுமதி வளர்ச்சி சிறு குறு தொழில்களில் புதிய வேகம், விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி தவின் கட்டமைப்பு திட்டங்கள், நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் இலக்கை நிர்ணயித்து, தற்சார்பு இந்தியாவை பாரதப் பிரதமர் அவர்கள் உருவாகி வருகிறார்.

இந்தியாவின் நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளான காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோவில் கட்டுவது என பல்வேறு பிரச்சனைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டு, எழுச்சி மிக்க இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ரூ 500 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் திகழ்கிறது.

நல்ல அரசன் இல்லாத நாடு எவ்வளவு வளம் இருந்தாலும், அதனால் பயனடையாது அனைவரையும் அரவணைத்து, அனைவரின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் நமது பிரதமர் அவர்களின் அயராத உழைப்பில் தேசத்தினை உயர்த்திட நாமும் தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று உறுதி கொள்வோம்.

தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தும் அர்ப்பணித்து, நமக்கெல்லாம் சுதந்திரம் பெற்றுத் தந்த ஒன்றுபட்ட பாரதத்தை உருவாக்கிய தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூறி அனைவருக்கும் 74வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்