விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் – செங்கோட்டையில் மோடி அறிவிப்பு.!

Default Image

74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றினார்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாற்றிய மோடி பல திட்டங்களை நிறைவேற்று வதாகவும், கொரோனா குறித்தும் பேசினார். அப்போது, சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் எனவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என தனது உரையை தொடங்கினார்.

நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. கொரோனாவிற்கு எதிராக போராடும்  முன்கள பணியாளர்களுக்கு நன்றி, கொரோனாவிற்கு  எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறினார். மேலும், கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு  இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

நமது 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பீம் செயலி மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அடுத்த 1,000 நாட்களில் ஆறு லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, காஷ்மீரில் தொகுதி மறுவரை பணிகள் முடிந்தவுடன் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு  வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.

இதனையடுத்து,  ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்