சற்று நேரத்தில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றவுள்ளார்.!
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சற்று நேரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இதன்காரணமாக செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வழக்கமாக வருடாவருடம் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.
சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுதந்திர தின விழாவில் முக்கிய பிரமுர்கள் என 3,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிந்து வரவும் , கையை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளது.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் மருத்துவ குழுவினர் உள்ளனர்.