#BREAKING: தனிமைப்படுத்திக்கொண்ட கேரள முதல்வர் பிணராயி விஜயன்.!
தனிமைப்படுத்தி கொண்ட கேரள முதல்வர் பினராய் விஜயன்.
சமீபத்தில் கோழிக்கோடு விமான விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கேரள முதல்வர் பினராய் விஜயன் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால், கேரள முதல்வர் பினராய் விஜயன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து, நாளை சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.