திணிக்காதே திணிக்காதே! பறிக்காதே பறிக்காதே! தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் ட்வீட்.!
தமிழக அரசு பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழகத்தில் தமிழில் நடத்த வேண்டும் – வேல்முருகன்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்களே அதிகம் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற் சாலையில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கிரேட் 3 தொழில்நுட்ப பணியாளர்கள் 540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த பணியமர்த்த ஆணைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழகத்தில் தமிழில் நடத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், திணிக்காதே திணிக்காதே தமிழக ஒன்றியப் பணிகளில் வட இந்தியரைத் திணிக்காதே, பறிக்காதே பறிக்காதே ஒன்றியத் துறைகளில் தமிழரின் வேலைவாய்ப்பைப் பறிக்காதே, ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழில் நடத்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழ்நெறி அவனவன் ஊரில் அவனவன் வாழ்க என்பதும் தமிழ்நெறிதான் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றோரு பதிவில், பறிபோகும் தமிழர்களின் வேலைவாய்ப்புகள். தமிழக அரசே தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இயற்று என்று ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார்.
திணிக்காதே திணிக்காதே!
தமிழக ஒன்றியப் பணிகளில் வட“இந்தி”யரைத் திணிக்காதே!
பறிக்காதே பறிக்காதே
ஒன்றியத் துறைகளில் தமிழரின் வேலைவாய்ப்பைப் பறிக்காதே!
ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழில் நடத்து
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழ்நெறி
அவனவன் ஊரில் அவனவன் வாழ்க என்பதும் தமிழ்நெறிதான்! pic.twitter.com/mbxocb4IgG— Velmurugan.T (@VelmuruganTVK) August 14, 2020