அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை – விஜயகாந்த்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வாழ்த்துக்கள்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதேநேரத்தில் துணை அதிபருக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.
இதனால், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இந்நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை போட்டியிட தேர்வு செய்யப்பட்டதாக ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறுகையில், கமலா ஹாரிஸ் தமிழ் தோற்றத்தைச் சேர்ந்தவர், இவர் துணை வேட்பாளராக அமெரிக்க ஜனநாயகக் கட்சி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் பெருமைமிக்க தருணம் என்று கூறி கமலாஹரிஸ் அமெரிக்க தேர்தல்களில் அனைத்து வெற்றிகளும் பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரீஸ் தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கடந்த 2016-ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க செனட் சபைக்கு தேர்வு பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையும் ஏற்கனவே இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kamala Harris (from Tamil Origin) , has been nominated as the Vice Presidential candidate by the US Democratic party.
Pride moment for Indians and Tamilians.
I wish @KamalaHarris all the success in the upcoming US elections.@KamalaHarris | #USElection2020 pic.twitter.com/uqzdQz9bwR— Vijayakant (@iVijayakant) August 13, 2020