மக்களே.! வெள்ளை காகத்தை பார்த்ததுண்டா.? ஒடிசாவில் காணப்படும் அரிய வகை வெள்ளை காகம்.
ஒடிசாவின் ஜார்சுகடாவில் காணப்படும் அரிய வெள்ளை காகம்.
ஒடிசாவின் ஜார்சுகடா மாவட்டத்தில் அன்மையில் ஒரு அரிய வெள்ளை காகம் காணப்பட்டது. தகவல்களின்படி, அசாதாரண பறவை ஒரு குடியிருப்பாளரின் வீட்டின் வாசலில் காணப்பட்டது .இதன் பின் வனத்துறை அதிகாரிகள் அந்த வெள்ளை நிற காகத்தை மீட்டு கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
காகங்கள் கருப்பு நிறத்தில் இருப்பதை நாம் அறிந்திருந்தாலும் அவற்றில் சில வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த வெள்ளை நிற காகத்தை அல்பினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை நிறம் மரபணு காரணங்கள் அல்லது ஹார்மோன் குறைபாடு காரணமாக மாறுகிறது .
இதற்கிடையில் கர்நாடகா மற்றும் டெல்லியிலும் இதே போல் வெள்ளை காகங்கள் காணப்பட்டது குறிப்பிடதக்கது.