பி.எஸ் -4 ரக வாகனங்களை பதிவு செய்ய அனுமதி – உச்சநீதிமன்றம் .!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால், தற்போது, பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக வாகனங்கள் என விற்கமுடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால், 6,300 கோடி தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விற்பனையாளர்கள் கூட்டமை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மறு உத்தரவு வரும்வரை BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஊரடங்கிற்கு பிறப்பிப்பதற்கு முன் அதாவது மார்ச் 31-ம் தேதிக்கு முன் விற்கப்பட்ட பிஎஸ் 4 வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதி என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
BS-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த BS-4 ரக வாகனங்களை விட BS-6 வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும். மேலும், BS-6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளது.
இதனால், BS-5 என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக BS-6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. BS-6 விலை அதிகம் என்றாலும் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக மக்கள் BS-6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.