பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலின்.!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலின்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து கூறிய மருத்துவமனை நிர்வாகம், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அப்போது இவர் பேசுகையில் ‘மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், பிரணாப் முகர்ஜி விரைந்து நலம்பெற விரும்புவதாகவும்’ மு.க.ஸ்டாலின் கூறினார்.