நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை – பிரதமர் மோடி
வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் பல வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்குவது, மற்றவர்களை ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். நாட்டில் இயங்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் போக்கு இன்று ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது .நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை அமைந்துள்ளது .நேர்மையாக வரி செலுத்துவோர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.கடமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன . மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீட்டை குறைக்கும் பெரும் முயற்சி ஆகும் என்று தெரிவித்துள்ளார்.