3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 287 டன் அம்மோனியம் நைட்ரேட் .!

மணலியில் இருந்து 3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் 287 டன்  அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த வாரம் லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து சென்னை மணலி துறைமுகத்தில் 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்ட 740 டன் எடையுள்ள அம்மோனியம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மணலியில் உள்ள சரக்குப்பெட்டகத்தில் 37 கன்டெய்னர்களிலாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் 12 ஆயிரம் பேர் வசிப்பதால், அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தலைமையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 37 கன்டெய்னர்களில் முதல் கட்டமாக 10 கன்டெய்னர்களை லாரி மூலம் அனுப்பட்டது.

இதற்கிடையில் இரண்டாம் கட்டமாக மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 12 கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மணலியில் இருந்து 2 கட்டங்களாக 410 டன் மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று மூன்றாம் கட்டமாக கட்டமாக 15 கண்டெய்னர்களில் 287 டன் அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுகிறது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.