நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி

Default Image

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் நியூசிலாந்து அணிக்குஇது 2-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி யாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவிடம் 2015-ஆம் ஆண்டு மோதியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது 3-வது பகல்-இரவு போட்டியாகும்.இதற்கு முன்பு விண்டீஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஆஸ்தி ரேலியாவுடன் விளையாடி இருக்கிறது.பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் இளஞ்சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படு கின்றன. இதுவரை 8 பகல்-இரவு டெஸ்ட்போட்டிகளில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் தலா 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி வியாழனன்று காலை 6:30 மணிக்குத் தொடங்குகிறது. கிரிக்கெட் உலகில் வலுவான அணியாகக் கருதப்படும் இந்தியா மட்டுமே இதுவரை பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளை யாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் தனது அணியின் பெயரை விண்டீஸ் (வெஸ்ட்இண்டீஸ்) எனச் சுருக்கமாக மாற்றியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்