அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை – அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் .உள்நோயாளிகளாக 27.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை 1.80 லட்சம் பிரசவங்களும் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.