மாணவர்கள் கவனத்திற்கு.. ஒத்திவைக்கப்பட்ட கிளாட் தேர்வு தேதி அறிவிப்பு.!

Default Image

கிளாட் தேர்வு Common Law Admission Test (CLAT 2020)  செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும்,  LL.M எனும் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேருவதற்கு பொதுச் சட்டச் சேர்க்கைத் தேர்வு நடைபெறும்.

இந்த, கிளாட் தேர்வை கடந்த மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த என்.எல்.யூ கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.

அனைத்து மாணவர்களும் தேர்வை பாதுகாப்பாக எழுத முடியுமா..? என்ற கேள்வி அதிகாரிகளுக்கு எழுந்தது, மேலும், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு,  Common Law Admission Test (CLAT 2020) தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்றகூட்டத்திற்குப் பிறகு, செப்டம்பர் 7 -ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று NLU கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான அட்மிட் கார்டுகள் இரண்டு வாரத்தில் என்.எல்.யூ கூட்டமைப்பு  https://consortiumofnlus.ac.in/  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் Common Law Admission Test (CLAT 2020) தேர்வை   மொத்தம் 70,000 மாணவர்கள் தேர்வு எழுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin
US Election 2024 trump win