“சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உண்டு”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண்களுக்கு சொத்து உரிமையில் சம பங்கு வழங்குவது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2005 ஹிந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.