ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் யார் முதலிடம் தெரியுமா..?

Default Image

ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதலிடம்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சிறந்த உலகம் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்றால் விராட் கோலிதான், அவர் செய்யும் சாதனைகள் அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் உள்ளது, மேலும் ஐபிஎல் போட்டிகளில் அவரது அணி ஒரு முறை கூட இறுதி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் கோலி இருப்பார், மேலும் அவர் கிரிக்கெட் போட்டியில் ரன்கள் அடித்து மட்டும் சாதனைகள் படைக்காமல் அதற்கும் மேல் பல சாதனைகளை படைத்தது வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இன்டஸ்டகிராமில் கூட கிரிக்கெட் வீரர்களில் அதிக மக்கள் பின்பற்றுவோர் எண்ணிக்கையில் விராட் கோலியை 72.5 மில்லயன் மக்கள் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை வைத்து முதலிடத்தை பிடித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார், ஆம் ஆன்லைனில் 16.2 லட்சம் முறை தேடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரட்ட கோலிக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா, தோனி சச்சின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்