மனிதநேயம் மடிந்து போகவில்லை என்பதற்கு இவர் தான் எடுத்துக்காட்டு! 50 வயது பெண்ணின் அட்டகாசமான செயல்!
தன்னுடைய எல்லா உடைமைகளை இழந்த நிலையிலும், மற்றவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்ட மூதாட்டி.
கொரோனா வைரஸ் பரவல் மக்களை அச்சுறுத்த, இயற்கையின் மாற்றங்களும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெல்ல பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அவஸ்தைபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் அண்மையில் பெய்த கனமழையால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையைச் சேர்ந்த காந்தா மாருதி காலன் என்ற 50 வயது பெண், துள்சி பைப் சாலையில் பூக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், அந்த இடம் தான் அவர் வசிக்கும் இடமாகவும் இருந்தது.
இந்நிலையில், மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அவரது உடைமைகள் முழுவதும் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிய, மாநகராட்சி ஊழியர்கள் வரும்வரை காத்திராமல், பாதாள சாக்கடை பள்ளத்தை திறந்து வைத்து, பள்ளத்தில் சிக்கி வாகன ஒட்டிகளுக்கு பாதிப்பு ஏதும் வந்துவிடக் கூடாது எனும் நோக்கில் அங்கேயே நின்று மக்களுக்கு வழிகாட்டினார். இந்தச் செயல் பலரையும் நெகிழ வைத்தது.
தன்னுடைய எல்லா உடைமைகளை இழந்த நிலையிலும், மற்றவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்ட, இந்த மூதாட்டிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.