கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

Default Image

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற 33.31 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு நிகழ்ச்சியில் தடுப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் உலகில் உள்ள வல்லரசு நாடுகளே கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் அரசாங்கத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரமான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் நேரடி பரிசோதனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான அளவு உபகரணங்களும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடி மதிப்பிலான பல தொழில் துறைகள் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்