தமிழகத்திற்கான நிதி குறித்து பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார் – அமைச்சர் ஆர்..பி.உதயகுமார்
தமிழகத்திற்கான நிதியை ஒதுக்குவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்குவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் உடனான ஆலோசனையில் வலியுறுத்துவார் என்று கூறினார்.மேலும் காதாரத்துறை ஆய்வுக்குப் பின்னரே எம்.எல்.ஏக்களுக்கான கொரோனா சிகிச்சை நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.