இந்த 3 வழிமுறைகளை பின்பற்றினால் பொருளாதாரத்தை மீட்டுவிடலாம்.! மன்மோகன் சிங் அறிவுரை.!
கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சி உடன் ஆன்லைன் விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது கொரோனா தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ள பொருளாதார இழப்பு பற்றி பேசினார்.
கொரோனாவால், சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்க மூன்று முக்கிய வழிமுறைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார்.
அதில், முதலாவதாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அவர்கள் வாங்கும் திறனை அதிகரிக்க அரசு பண உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இரண்டாவதாக, தொழில் செய்வோருக்கு அரசு உதவியுடன் கூறிய கடன் உத்திரவாத திட்டத்தை வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
மூன்றாவதாக வங்கி உள்ளிட்ட நிதித்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
இந்த 3 வழிமுறைகளை பின்பற்றினால், கொரோனாவால் சரிந்துள்ள இந்திய பொருளாதாரத்தை அரசு மீட்டுவிடலாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.