ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.!
முதல்வர் பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நலதிட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் கூட 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்காசியில் செயல்படுத்தப்பட உள்ள 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார்.
அந்த வகையில் இன்று பல்வேறு அரசு துறைகளின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 15.16 கோடி மதிப்பிலான 14 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அது மட்டுமின்றி ரூ. 20.86 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.