நாளை மாநிலங்களவையில் 25 இடங்களுக்கான வாக்குப்பதிவு !
நாளை மாநிலங்களவையில் 25 இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
16 மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 58 இடங்களை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இதில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், 6 மாநிலங்களில் இருந்து 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளை மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எட்டு வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யக்கூடிய பலம் பெற்றுள்ள பாஜக ஒன்பதாவது வேட்பாளரைக் களம் இறக்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.